சனி, 22 ஜனவரி, 2011

வித்யாசாகருக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது..

அன்புறவுகளுக்கு வணக்கம்,

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. "உலக தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் இரண்டாவது மாநாடு - 2001" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டு, இன்றும் நாளையும் (22.01.2011 ~ 23.01.11) என நடந்துக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் நூறு கவிஞர்களுக்கும், நூறு எழுத்தாளர்களுக்கும், நூறு ஆய்வாளர்களுக்கும் என்று விருது வழங்கி சிறப்பிக்க அறிவித்தனர். அதில் திரு. வித்யாசாகருக்கும் சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

எங்களின் இலக்கிய பயணத்தில் எமக்கு பெரும் உதவியாய் நின்று, எம்மை எப்பொழுதிற்குமாய் வாழ்த்தி மகிழ்ந்து, எம் படைப்புக்களுக்கு முதல் தர இடம் தரும் உங்களுக்கே நன்றிகள் அனைத்தும். உரித்தாகும்.

இது தாயகத்தில் கிடைக்கும் முதல் விருது என்பதாலும், இதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளாமல்; உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக மட்டும் எடுத்துக் கொள்ள எண்ணியதாலும், அம்மாவினை விருது பெற அனுப்பி அதற்கான வேண்டுதலையும் "தமிழ்த்தாய் அறக்கட்டளைக்கு" அனுப்பியுள்ளோம். நம்மை வரவேற்று உடன் இருந்து சிறப்பு செய்யும் வண்ணமும், அம்மாவை உடன் இருந்து காத்துக் கொள்ளவும், 'முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்' அமைப்பை சார்ந்தவர்கள் அங்கு வந்து பெருமை செய்கிறார்கள்.

தவிர, ஒரு பணியை செய்பவருக்கு, நீ செய்வது சரி தான் தொடர்ந்து இயங்கு என்று ஊக்குவிக்கும், ஒரு நிறைவாக மட்டுமிதை எடுத்துக் கொண்டு, இறையின் அருளிற்கும் உங்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க இப்பெரும்பணியை செய்யும் தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பு, உலக தமிழ் கவிஞர் பேரவை, MIET கல்வி நிறுவனங்களுக்கும் கைகூப்பி நன்றிகளை தெரிவிக்கிறோம்!!

பெரு நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

10 கருத்துகள்:

 1. http://vidhyasaagar.com/2011/01/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

  பதிலளிநீக்கு
 2. nal vaalthukal! valarka! vaalka!

  பதிலளிநீக்கு
 3. எங்கள் அருமை நண்பர் வித்யா சாகர் அவர்களுக்கு கிடைக்கும் இந்த விருது எங்களுக்கே கிடைத்தது போல அளவற்றதோர் மகிழ்ச்சி அளிக்கிறது .வாழ்த்துக்கள் நண்பரே !

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் கவிஞரே! மேன்மேலும் வளர்ந்து வளம் பெறுக!
  பாவலர் இராஜ.தியாகராஜன்

  பதிலளிநீக்கு
 5. விழா நிறைவாக முடிந்துள்ளது. அம்மா மகிழ்வாக பேசினார்கள். முகநூல் நண்பர்கள் நற்பணி மன்றத்து உறவுகள் முழு பலமாக உடன் இருந்துள்ளனர். விருது வாங்க அழைக்கையில் முதல் குரல் கேட்டதும் அம்மா மேலேறி போக, வித்யாசாகருக்கு வேண்டாம் என்றார்களாம். எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்து போனார்களாம். பிறகு சொன்னார்களாம். அவருக்கு ஒன்று அல்ல நிறைய விருதுகள் இருக்கிறதென்று. கடைசியாய் அழைத்து ஐந்து விருதுகள் கொடுத்தார்களாம்!

  சுமந்து வந்ததாய் சொன்னார்கள் அம்மா!

  சுமந்ததெல்லாம்; உங்களை போன்றோரின் அன்பும் வாழ்த்தும் மட்டுமே..

  மிக்க நன்றிகளுடன்..

  முகில் பதிப்பகம்

  பதிலளிநீக்கு
 6. parkkavea sandhoshamaaga irukkiradhu... uzhaippin vetri endrum suvaiyaaga dhaan irukkum enbadhil endha sandhegamum illai...

  endrum anbu vaazthukkaludan

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் அண்ணே மேன்மேலும் வளர்ந்து வளம் பெறுக!

  பதிலளிநீக்கு
 8. என் அன்பு நண்பனே வித்யா!

  ஈழத்தமிழச்சி இவளின் பெருமை சேர் பாராட்டுக்கள்.

  எழுத்தைத் தவமாகக் கொண்டிருக்கும் உன் எழுத்தில் கிறங்கிப் போய் உன்னைத் தேடி வந்திருக்கும் விருதுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  உன் எழுதுகோல் எங்கள் உறவுகளுக்காகவும் தலை தாழ்த்தி தாள்களைத் தொட்டதால் உன் வெற்றியில் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தலை நிமிர்கிறோம்.

  லண்டனில் GTV தொலைக்காட்சி செய்தியில் மிகவிரிவாக உன்பணி, விருதுகள் பற்றிச் சொன்னபோது ஆனந்தக்கண்ணீர் என் விழிமடலை நனைத்தது நண்பா!

  ஒன்றல்ல, இரண்டல்ல, ஐஐஐந்த்ந்த்ந்த்து விருதுகள்... அப்பப்பா! வாழ்த்துக்கள் தோழரே!

  மேலும் உன் பணி தொடரட்டும் நண்பா!
  நாமும் அடிக்கடி இப்படி இன்ப மழையில் குளிக்கலாம் சிநேகிதனே!

  வாழ்க நின் பணி! வளர்க தமிழ்!!

  உன் மகிழ்வில் மகிழ்பவள்.
  நிலா - லண்டன்

  பிற்குறிப்பு
  அம்மா சொல்கிறார் : என்னையும் சேரடி.

  ஆம் தானும் இவ்வாழ்த்தில் இணைவதாக அம்மா கூறிய வசனம் இது.

  பதிலளிநீக்கு
 9. உணர்சி தமிழன்
  உறங்கா கவிஞ்ஞன்
  உறக்கம் தொளைத்து
  உணர்வை பெருக்கியவன்
  உள்ளம் மகிழும் இவ்வேளையில்
  உளமார நாமும் வாழ்த்தி
  உலகமே போற்ற சாற்றி நிற்போம் .

  நன்றியுடன்
  அருளீசன் .

  பதிலளிநீக்கு
 10. மிக்க நன்றி உறவுகளே. தொடர்ந்து இணைந்திருங்கள், எழுத்துக்களால் பழைய நற்பண்பு மாறாமலும், புதிய வெற்றிக்கான மாற்றங்களோடும் கூடிய நல்லுறவுகளை இணைப்போம்; வளர்ப்போம்!!

  பதிலளிநீக்கு