சனி, 22 ஜனவரி, 2011

வித்யாசாகருக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது..

அன்புறவுகளுக்கு வணக்கம்,

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. "உலக தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் இரண்டாவது மாநாடு - 2001" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டு, இன்றும் நாளையும் (22.01.2011 ~ 23.01.11) என நடந்துக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் நூறு கவிஞர்களுக்கும், நூறு எழுத்தாளர்களுக்கும், நூறு ஆய்வாளர்களுக்கும் என்று விருது வழங்கி சிறப்பிக்க அறிவித்தனர். அதில் திரு. வித்யாசாகருக்கும் சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

எங்களின் இலக்கிய பயணத்தில் எமக்கு பெரும் உதவியாய் நின்று, எம்மை எப்பொழுதிற்குமாய் வாழ்த்தி மகிழ்ந்து, எம் படைப்புக்களுக்கு முதல் தர இடம் தரும் உங்களுக்கே நன்றிகள் அனைத்தும். உரித்தாகும்.

இது தாயகத்தில் கிடைக்கும் முதல் விருது என்பதாலும், இதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளாமல்; உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக மட்டும் எடுத்துக் கொள்ள எண்ணியதாலும், அம்மாவினை விருது பெற அனுப்பி அதற்கான வேண்டுதலையும் "தமிழ்த்தாய் அறக்கட்டளைக்கு" அனுப்பியுள்ளோம். நம்மை வரவேற்று உடன் இருந்து சிறப்பு செய்யும் வண்ணமும், அம்மாவை உடன் இருந்து காத்துக் கொள்ளவும், 'முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்' அமைப்பை சார்ந்தவர்கள் அங்கு வந்து பெருமை செய்கிறார்கள்.

தவிர, ஒரு பணியை செய்பவருக்கு, நீ செய்வது சரி தான் தொடர்ந்து இயங்கு என்று ஊக்குவிக்கும், ஒரு நிறைவாக மட்டுமிதை எடுத்துக் கொண்டு, இறையின் அருளிற்கும் உங்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க இப்பெரும்பணியை செய்யும் தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பு, உலக தமிழ் கவிஞர் பேரவை, MIET கல்வி நிறுவனங்களுக்கும் கைகூப்பி நன்றிகளை தெரிவிக்கிறோம்!!

பெரு நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்