வியாழன், 2 செப்டம்பர், 2010

"நிலாவின் இந்திய உலா" சென்னையில் புத்தக வெளியீடு!

"அம்மா என்ற வார்த்தைக்கான 'எங்களின் சிறப்பு வரமிவள் திருமதி. கெம்பீஸ்வரியம்மாள் "



"ஒரு உழைப்பின், நம்பிக்கையின், முயற்சியின் வெற்றி இங்கே வெளியீடாய் அரங்கேறுகிறது"



"நட்பை பெருமைபடுத்திய சில நட்புள்ளங்களின் காட்சியிது, இணையத்தால் இணைந்த இதயங்கள்"



"ஒரு படைப்பின் கதை முளைத்த, பாசத்தின் பினைப்பிது 'நிலாவும் அவருடைய அம்மாவும்"



"இந்த ஏக்கத்தின் பார்வையில் பூக்கட்டும் 'இன்னும் பல புத்தகப் பூக்கள்! "


சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது 'முகில் பதிப்பக வெளியீடான "நிலாவின் இந்தியவுலா" புத்தக வெளியீட்டு விழா.

29.08.2010 அன்று காலை பத்து மணி முப்பது நிமிட நேர அளவில் 'முகில் பதிப்பகம்' சார்பாக திரு. வித்யாசாகரின் தாயார் குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைக்க, பெரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாடலாசிரியர் என எல்லாம் கடந்து இலக்கிய பெரியோர்களாகத் திகழும் திரு. பிறைசூடன், திரு. ஞானி மற்றும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான திரு. யுகபாரதி, ஆலயம் அமைப்பினை சேர்ந்த திரு. ராஜவேலு போன்றோர் வாழ்த்தி பேசியதோடு 'நிலாவின் இந்தியவுலா' புத்தகம் குறித்தும், நிலாவின் உழைப்பு, நம்பிக்கை, முயற்சி, நட்பு என அவரின் சிறப்பு பற்றியும் மிக சிறப்பாக அவரவர் பங்கிற்கு எடுத்து பேசினர்.

முகில் பதிப்பகம் சார்பாக வித்யாசாகரின் தாயார் திருமதி கெம்பீஸ்வரியம்மாள் அவர்கள் மூலம் எழுத்தாளர் நிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப் பட்டு, விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி 'விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.

விழாவில் நிலா ஒரு சிறப்பெனில், அவரின் புத்தகம் ஒரு சிறப்பெனில், நண்பர்களே மிக சிறப்பாக அரங்கம் நிறைந்து காணப்பட்டதும், நட்பினால் நெகிழ்ந்த, நடந்த விழா இது என்பதும் மிக குறிப்பிடத் தக்கதுமாகும்.

நிலா என்ற தன் மகளின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, ஈழத்தில் இருந்து லண்டனுக்கும், லண்டனிலிருந்து சென்னைக்குமென பயணித்து நிலாவின் முழு துணையாகவும், அவருக்கு துணையாக நிற்பதொன்றே தன் கடமையாகவும் எண்ணி, பாசத்தினால் பூரித்து நின்ற அந்த 'நிலாவின் தாயாருக்கே, 'இவ்விழாவின் பாராட்டுக்களும் வெற்றியும் சென்றடைவதில் நிலா முழு மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையை 'இங்கே உலகத்தின் பார்வையில் பதிந்து வைக்கிறேன்!

உலகமெலாம், தமிழ் வாழும் வரை நிலாவின் புகழும், எழுத்தும் நிலைத்தோங்கட்டும்!!

இப்புத்தகத்தினை மிக அழகாகவும் தரமாகவும் அச்சிட்டு தந்த தா. அகிலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க வாழ்த்துக்களோடு..

முகில் பதிப்பகம்

வியாழன், 17 ஜூன், 2010

வித்யாசாகரின் எத்தனையோ பொய்கள்!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்




ணையத்தில் இதயம் தாங்கி நட்ப்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான "எத்தனையோ பொய்கள்" விற்ப்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97866218777) மற்றும் ஐயா கிரிராஜ் (9600000952) அவர்களை தொடர்பு கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

வியாழன், 22 ஏப்ரல், 2010

நற்செய்தி! நற்செய்தி!!

தோழர்களுக்கு வணக்கம்,

இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-
http://tamilvu.org/courses/couindex.htm பின், பாடங்கள் சொடுக்கவும் ~ D0414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ D04142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.

நன்றிகளுடன்..
முகில் பதிப்பகம்